×

ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பிய தம்பதி மீது நடவடிக்கை கோரி புகார்

பெரம்பலூர், மார்ச் 20: கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக பொ ய்யான வதந்தியைப் பரப்பிய தம்பதி மீது நடவடிக் கை எடுக்கப் புகார் தெரிவி க்கப் பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி தகவல். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 17ம் தேதிக்கு முன்பு வரை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சென்று வெளிநா டுகளில் வேலை பார்த்த, படித்துக் கொண்டிருந்த 33 நபர்கள் பெரம்பலூர் மாவ ட்டத்திற்குத் திரும்பி வந்த நிலையில், நேற்று மேலும் 5பேர் வந்துள்ளதால், வெளி நாட்டிலிருந்துத் திரும்பிய பெரம்பலூர் மாவட்டத்தவரின் எண்ணிக்கை தற்போது 38 ஆக உள்ளது.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய்த்தொற்று உள்ளதா என்பதை அவர் கள் வரும் போதே விமான நிலையங்களில் மருத்துவ குழுவினரால் பரிசோதிக் கப்பட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த 38 நபர்களும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் து றையினரால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில் 28 நாட்கள் வரை வைத்து நோய்த் தொற்று ஏற்படுகிறது என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த 17ம் தேதி பாடாலூர் அருகே உள்ள தொட்டியப்பட்டி கிரா மத்தில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது என்ற தவறான வதந்தியை செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி ஹோமியோபதி மருத்துவ ரான பிரீத்தி தம்பதியினர் பரப்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று சம் பந்தமாக தவறான வதந்திகளை பரப்புவோர் மீது தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக சம் பந்தப்பட்ட தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மற்றும் மாவட் டக்கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் யாரும் எந்தவித வதந்திக்கும் இ டம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும் அரசு ஆ ரம்ப சுகாதார நிலையங் கள் மற்றும்மருத்துவமனை களில் பணிபுரியும் அனை த்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மருத் துவமனையில் பணியாற் றும் அனைத்து பணியாளர் களுக்கும் கொரோனா வை ரஸ் பற்றிய சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு முழுமை யான சிகிச்சைஅளிக்க முனனேற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோய்த்தொற்றுக்கு என தனி சிறப்பு வார்டு அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் யாரும் அச்சம்கொள்ளத் தேவை யில்லை. பொது மக்கள் சேவைக்காக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தயார் நிலையிலுள்ள கட்டுப் பாட்டு அறை க்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் பேசி கொரோனா குறித்த சநேதேகங்களுக்கு விளக்கம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வைரல் தம்பதி!