×

பாடாலூரில் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடினர்

பாடாலூர், மார்ச் 20: ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை பூட்டை உடைத்து ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த மணி மகன் பாலமுருகன் (33). இவர் பாடாலூரில் ஊட்டத்தூர் பிரிவு ரோடு அருகில் தேனியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் பாலமுருகன் வந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : parts ,
× RELATED தங்க நகைகள் தயாரிக்க தேவைப்படும்...