×

கொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து

நாகை,மார்ச்20: கொரோனா வைரஸ் எதிரொலியால் நாகை மாவட்டத்தில் வரும் 31ம் தேதி வரை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக குறை கேட்பு கூட்டங்கள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களை மாநிலம் முழுவதும் ரத்து செய்ய வருவாய் நிர்வாக ஆணையரகத்தால் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கொரோனா பீதி பரவியுள்ள நிலையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மற்றும் அதிகாரிகள் கூடும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 31ம் தேதி வரை நடைபெறாது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தபால் முலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,
× RELATED கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி