×

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு

மயிலாடுதுறை, மார்ச் 20: மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காவிரியில் திருப்பி விடப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் இந்த செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை நகர் ரயில்வே சந்திப்பு தெரு வழியாக செல்லும் பாதை குறுக்கே பழங்காவிரி செல்கிறது. அதற்காக கட்டப்பட்ட பாலத்தின்கீழ் மயிலாடுதுறை பாதாள சாக்கடை குழாய் செல்கிறது. இந்த குழாய் கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. அதை இதுநாள்வரை சரிசெய்யவில்லை. இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கனகசுந்தரம் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் வெறியேறும் பகுதியை பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்கறிஞர் கனகசுந்தரம் கூறுகையில், பழங்காவிரியில் அதிக ஆக்கிரமிப்பு உள்ளதாக நாங்கள் அதற்காக போராடி வரும் நிலையில் தற்பொழுது பாதாள சாக்கடை குழாய் உடைக்கப்பட்டு அதிலிருந்து கழிவுநீர் பழங்காவிரி ஆற்றில் விடப்படுவது கண்டிக்கத்தக்கது.

ரயில்நிலையம் முன்பாக கழிவுநீர் வெளியேறி சாலையில் பரவி துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ரயில்வே பகுதி வணிகர் சங்கம் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திடீரென்று பழங்காவிரி வழியாக செல்லும் பாதாளசாக்கடை குழாயை உடைத்து கழிவுநீரை ஆற்றில் விட்டுவிட்டனர். நகராட்சி அதிகாரிகள் வேண்டுமென்றே கழிவுநீரை பழங்காவிரி ஆற்றில் திறந்துவிட்டதால் ரயில்வே பகுதியில் சாக்கடைநீர் வழிவது நின்றுவிட்டது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழங்காவிரியில் கழிவுநீரை விட்டதற்காக கட்டுப்பாட்டுவாரியம் மயிலாடுதுறை நகராட்சிக்கு அபராதம் விதித்துள்ளது. இதுநாள்வரை உடைந்த குழாயை அடைக்காமல் அப்படியே உள்ளதால் கழிவுநீர் ஆற்றில் வெளியேறி வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தை நாடுவது என்று முடிவெடுத்துள்ளோம் என்றனர்.

Tags : court ,Mayiladuthurai ,
× RELATED மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா...