×

கொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு

காரைக்கால், மார்ச் 20: கொரோனா எதிரொலி காரணமாக காரைக்கால் கோட்டுச்சேரி சட்டமன்ற தொகுதியில், 5 கோயில்களின் கும்பாபிஷேகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், கொரோனா தொற்று நோய் காரைக்காலில் பரவாமல் தடுக்கும் வகையில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோட்டுச்சேரி சட்டமன்ற தொகுதியில், கோடீஸ்வரமுடையார் தேவஸ்தானத்தை சேர்ந்த சீதளாதேவி மாரியம்மன், வெள்ளை விநாயகர், பூரனை புஷ்கலை உடனமர் உழவடை மூர்த்தி அய்யனார், பிடாரி அம்மன், எல்லைபிடாரி அம்மன் ஆகிய 5 கோயில்களில் திருப்பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று, வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள், பக்தர்களுக்கு பத்திரிகைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கும்பாபிஷேகம் தேதியை தள்ளிவைக்குமாறு கோயில் நிர்வாகத்தினரை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதன்பேரில், 22ம் தேதி நடைபெறவேண்டிய கும்பாபிஷேகத்தை தேதி குறிப்பிடாமல் கோயில் நிர்வாகம் தள்ளி வைத்தது. மறு தேதி பிறகு அறிவிக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Coronal Echoes 5 Temple Pilgrimage ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 8 வரை ரத்து