×

கொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்

கீழ்வேளூர், மார்ச் 20: 5 மாதத்திற்கு பின் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தினகரன் செய்தி எதிரொலியாக தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் நாகை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அவை குறிப்பிட்ட சீசன் நேரத்தில் (பருவ காலத்தில்) மட்டும் இயங்கும். கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 14 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு ரூ.3,000 வீதம் வழங்கப்படும். தீபாவளி போனஸ் இந்த ஆண்டு வழங்கப்பட வில்லை. இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் விரிவாக வெளியிடப்பட்டது. தினகரன் செய்தி எதிரொலியால் 14 பேருக்கும் வழங்க வேண்டிய தீபாவளி போனசை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் உடன் வழங்கினர். செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், உடன் தீபாவளி போனசை வழங்கிய தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கும் சுமை தூக்கம் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.

Tags :