×

வேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.

வேதாரண்யம், மார்ச் 20: வேதாரண்யத்தை தாலுகா அம்மாகட்டளை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி உத்ராதேவி (31). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.மோகன் அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். இந்நிலையில் தாணிக்கோட்டகத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் முருகேசன் என்பவர் உத்ராதேவியிடம் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. உத்ராதேவியிடம் பலமுறை முருகேசன் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உத்ராதேவியின் கணவர் மோகன் ஊருக்கு வந்துள்ளார். உத்ராதேவி முருகேசனிடம் பணத்தை திருப்பி கேட்டு கொடுக்காததால் தன்னைபாலியில் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து தன்னை மிரட்டுவதாக வாய்மேடு போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வாய்மேடு சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்குபதிவு செய்து முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Vedaranyam ,
× RELATED தூக்குப்போட்டு பெண் தற்கொலை