×

கோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி? வேளாண் இயக்குநர் விளக்கம்

கொள்ளிடம், மார்ச் 20: கோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்க வேளாண் இயக்குநர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் குறைந்து வருகின்ற சிறுதானிய உற்பத்தி பரப்பை அதிகப்படுத்திடவும், உற்பத்தி செய்து நல்ல மகசூல் பெறவும், அதனை உணவாக உட்கொள்ளும் போது உடல் வலுவடைவதுடன் உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. எனவே சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக கொள்ளிடம் அருகே உள்ள தாண்டவன்குளம் கிராமத்தில் கம்பன் உற்பத்தியாளர் மகளிர் குழுவிற்கு திணைகோ-7, சாமைஏடிஎல்-1, வரகுகோ-3, குதிரைவாலிகோ-2, கேழ்வரகுகோ-15 ஆகிய ரக சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டுள்ளது. தாண்டவன்குளம் கிராமம் சிறுதானிய உற்பத்திக்கு சிறந்த வளமான நிலமாக இருப்பதால் அப்பகுதிக்கு சிறுதானிய விதைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை மற்ற விவசாயிகளும் பின்பற்றி பாரம்பரிய உணவான சிறுதானியத்தை வாங்கி பயன்பெற வேண்டும் என்று கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தெரிவித்தார்.

Tags : Summer DIRECTOR ,
× RELATED விவசாயத்தை பாதுகாக்க கோரி ஏரலில் போராட்டம்