×

கொரோனா வைரஸ் எதிரொலியால் கடவூர், குளித்தலையில் வாரச்சந்தைகள் நிறுத்தம்

கடவூர், மார்ச் 20: கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் மக்கள் கூடும் இடங்களான வார சந்தைகள் காணியாளம்பட்டி (திங்கட்கிழமை), சுண்டுகுழிப்பட்டி (புதன்கிழமை), பாரப்பட்டி (புதன்கிழமை), தரகம்பட்டி (ஞாயிற்றுக்கிழமை), பாலவிடுதி (சனிக்கிழமை), தளிவாசல் (வியாழக்கிழமை) வீரணம்பட்டி (வியாழக்கிழமை) ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் கடவூர் ஒன்றியத்தில் மக்கள் கூடும் இடங்களான வாரச்சந்தைகள் வருகிற மார்ச் 31ம்தேதி வரையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின் பேரில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எனவே அடுத்த உத்தரவு வரும் வரை நடத்தக் கூடாது எனவும், மக்கள் இந்த இடங்களில் அதிகம் கூட வேண்டாம் என ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஒன்றிய நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குளித்தலை: குளித்தலையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காவேரி நகரில் வாரச்சந்தை நடைபெறும். தற்போது கொரொனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியால் குளித்தலை வாரச்சந்தை இன்று வெள்ளிக்கிழமையும், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 27ம் தேதி இரு தினங்களும் செயல்படாது என குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். அதனால் இன்று நடைபெறும் வாரச்சந்தை நடைபெறாது

Tags : Kadavur ,Bath ,
× RELATED அரியானாவில் கவுன்சிலர் குளிக்கும்...