×

பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி குளித்தலை நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்

குளித்தலை. மார்ச் 20: குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கை கழுவும்முறை குறித்து செய்து காண்பிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து நீதிமன்றத்துக்கு வரும் வக்கீல்கள் பொதுமக்கள் அலுவலர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சார்பு நீதிமன்ற நீதிபதி தர் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ், குற்றவியல் நடுவர்கள் பாக்யராஜ், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், நகர்நல மருத்துவ அலுவலர் அமீர்தீன் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கம் அளித்து பேசினர். இறுதியாக ஆறு வகையான கை கழுவும் முறையை செய்முறையாக காண்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, செயலாளர் நாகராஜன், அரசு வக்கீல் மனோகரன், மருத்துவ அலுவலர் சஹானா, மருத்துவ மேற்பார்வையாளர் செல்வராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், இளங்கோவன் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Coronavirus Awareness Meeting ,People's Awesome Bathing Court ,
× RELATED கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்...