×

குடியிருப்புவாசிகள் அச்சம் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் கைது

கரூர், மார்ச் 20: சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கரூர் வாலிபரை பிடித்து சென்னிமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (21), டிரைவர். இவர் சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிருந்து வேலை செய்து வந்தார். அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி சுகுமாறன் திருமணம் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் சிறுமியின் உறவினர்கள் கரூர் வந்தனர். கரூர் ரயில் நிலையத்தில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில்வே போலீசார் அவர்களை பிடித்து டவுண் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட விபரம் தெரியவந்தது. இதனையடுத்து சென்னிமலையில் இருந்து போலீசார் வந்தனர். அங்கு சிறுமியைக் காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து இருவரையும் சென்னிமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வாலிபரை கைது செய்து விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

Tags : Residents ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது