×

மணமேல்குடி கடைவீதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்

அறந்தாங்கி, மார்ச் 20: மணமேல்குடி கடைவீதியில் மக்கள் நல்வாழ்வுதுறை மற்றும் சிங்கவனம் வட்டார மருத்துவக்குழு சார்பில் கொரோனோ வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவர் பரணிகார்த்திகேயன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கொரோனோ வைரஸ் எவ்வாறு உருவாகிறது, அதன் அறிகுறிகள், எவ்வாறு தடுப்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு பணியாளர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்ராம், சுகாதார மேற்பார்வையாளர் சீனிமரைக்காயர், சுகாதார ஆய்வாளர் சிவமுருகன், லூர்து சேவியர் உட்பட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Manamelkudi Road ,
× RELATED தூத்துக்குடியில் இடிந்து விழுந்த...