×

கறம்பக்குடி அருகே விவசாயி வீடு தீயில் எரிந்து பொருள் சேதம்

கறம்பக்குடி, மார்ச் 20: கறம்பக்குடி அருகே மின் கசிவின் காரணமாக விவசாயி வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விவசாயி. நேற்று திடீரென இவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர்(பொறுப்பு) ரஜினி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். ஆனால் அதற்குள் கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமாகி விட்டது.

வீட்டிற்குள் இருந்த பீரோ , கட்டில் , பாத்திரங்கள் , சான்றிதழ்கள், ஆவணங்கள் , வெள்ளி பொருட்கள் , நகைகள் மற்றும் ரூபாய் 1,98000 ரொக்கம் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து கருகி விட்டன. மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : fire ,house ,Karambakkudi ,
× RELATED மதுராந்தகம் அருகே வீட்டில் மின்கசிவு...