×

கறம்பக்குடியில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

கறம்பக்குடி, மார்ச் 20: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை(48). இவர் அம்புக் கோவில் முக்கம் சாலையில் அனுமதியின்றி மது பானம் விற்பதாக வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி எஸ்ஐ அன்பழகன் தலைமையில் போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அண்ணாதுரை அம்புக்கோவில் சாலையில் உள்ள இரும்புகடை அருகே மதுபானம் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.  அவரிடம் இருந்து 20 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அண்ணாதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED முதியவரிடம் வழிப்பறி