×

கொரோனா வைரஸ் தடுப்பு கறம்பக்குடி பகுதியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்

கறம்பக்குடி, மார்ச் 20: உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள் , வாகனங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கறம்பக்குடி பேரூராட்சி சார்பில் கறம்பக்குடி காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மின் வாரிய அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமி நாசினி மருந்துகள் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் கூட்டத்தை தவிர்த்து குழந்தைகள், மாணவர்கள் பொது மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : coronavirus region ,
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி