×

கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை அறந்தாங்கியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முக கவசம்

அறந்தாங்கி, மார்ச் 20: அறந்தாங்கியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முகக்கவசம் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அறந்தாங்கியில் ரோட்டரி கிளப் சார்பில் பேருந்து ஓட்டுனர; மற்றும் நடத்துனர்களுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி கிளப் தலைவரும், கார்னிவல் கேட்டரிங் கல்லூரி தாளாளருமான தங்கதுரை தலைமை வகித்து அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு முகக்கவசம்(மாஸ்க்) மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். தொடர்ந்து பேருந்து பயணிகளுக்கும் கெரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அறந்தாங்கி கிளை மேலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அறந்தை ரோட்டரி கிளப் செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் சரவணன், உறுப்பினர்கள் விஜயசுந்தர், மெய்யப்பன், செந்தில்குமார், புவனா செந்தில்குமார், சிவசுப்பிரமணியன், அரசு போக்குவரத்து கழக பரிசோதகர் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : corona outbreak ,
× RELATED டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு...