×

கொரோனா வைரஸ் பீதி எதிரொலி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து

புதுக்கோட்டை, மார்ச் 20: புதுக்கோட்டையில் வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Corona virus panic echo peasants ,meeting ,
× RELATED பாஜக ஆலோசனை கூட்டம்