பேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

திருச்சி, மார்ச் 20: மணப்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருப்பவர் கண்ணதாசன். இவர் இதற்கு முன் திருச்சி மாவட்ட மதுவிலக்கு தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது சாராய வழக்கு ஒன்றில் தப்பி ஓடி 2 ஆண்டு தலைமறைவாக இருந்த ஒருவரை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் பிடித்து கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். தலைமறைவு குற்றவாளியை கைது செய்ததை பாராட்டி சென்னையில் உள்ள மதுவிலக்கு தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏடிஜிபி ராஜேஷ் தாஸ், கண்ணதாசனின் பணியை பாராட்டி, அவருக்கு ரூ.10,000 வெகுமதி வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: