×

மாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி, மார்ச் 20: உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இந்த மாஸ்க்குகள் மருந்து கடைகளில் கிடைக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்க்குகளை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து மருத்துவத் துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கலெக்டர் சிவராசு உத்தரவின் பேரில் மருத்துவதுறை அதிகாரிகள் திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு தனியார் மருந்து கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது சத்திரம் பஸ் ஸ்டாண்ட், பாலக்கரை, எல்ஐசி காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 3 மருந்து கடைகளில் மாஸ்க்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து மருத்துவத் துறை அதிகாரிகள் 3 கடைகளையும் 7 நாட்களுக்கு விற்பனை செய்ய தற்காலிக தடை விதித்தனர். கடைகளில் நோட்டீஸ் ஒட்டினர். இதையடுத்து கடைகள் உடனடியாக மூடப்பட்டது. மேலும் மருந்து கடைகளில் மாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : drug stores ,
× RELATED முருங்கை விலை ‘கிடுகிடு’