திருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி

திருச்சி, மார்ச் 20: திருச்சி காட்டூர் அரியமங்கலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(38). ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர்கள் திருவெறும்பூர் கீழமுல்லைகுடி அப்துல்ரஹ்மான் (28), அரியமங்கலம் ராஜாஜி தெரு சாம்பிரகாஷ்(35). கல்லணை சர்க்கார்பாளையம் வேல்முருகன், பொன்மலை சுரேஷ் ஆகிய அனைவரும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கும் தொழிலாளர்கள்.

Advertising
Advertising

இந்நிலையில் கோவையில் கூரை அமைக்கும் பணிக்காக நேற்று முன்தினம் காரில் புறப்பட்டனர். காரை சாம்பிரகாஷ் ஓட்டினார். கார் திருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அடுத்த முருங்கப்பேட்டையில் அதிவேகமாக சென்றது. அப்போது திடீரென பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறிய கார் குட்டிகரணம் அடித்து திருச்சி வந்த பாதை நோக்கி நின்றது. இதில் கார் உருண்டு புரண்டதில் சம்பவயிடத்திலேயே ஆறுமுகம் பலியானார். இது குறித்து தகவலறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவயிடம் வந்து அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அப்துல்ரஹ்மான் இறந்தார். மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: