மண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 20: மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழுத்தலைவர் தர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய ஒன்றிய குழு பதவியேற்பதற்கு முன்பு உள்ள காலகட்டத்திற்கான செலவினங்கள் மன்றத்தில் வாசிக்கப்பட்டு மன்ற உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து பேசினர். கோடை காலம் நெருங்குவதையொட்டி ஊராட்சிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூத்தி செய்யும்படியான பணிகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>