×

சர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்

திருச்சி, மார்ச் 20: திருச்சியில் காதல் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததுடன், பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரும்படி துன்புறுத்திய கணவர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் ஆலம்பாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சக்திவேல்(28), டிரைவர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி வயலூர் ரோடு உய்யகொண்டான்திருமலை பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த நளினியும்(27), அவரும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 23-1-2014ல் வீட்டை விட்டு ஓடி சமயபுரம் கோயிலில் திருமணம் செய்துகொண்டு உறையூர் மேட்டுத்தெருவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். பின்னர் இருவீட்டாருடன் அவர்கள் பேசிக்கொண்டதால் நளினிக்கு வரதட்சணையாக அவரது பெற்றோர் 13 பவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை வழங்கினர்.

இந்நிலையில் சக்திவேல் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததுடன், மேலும் அவரது வீட்டிலிருந்து நகை பணம் வாங்கி வரும்படி துன்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரை விட்டு வந்த நளினி தாய்வீட்டில் வசித்து வருகிறார். இது குறித்து அவர் ரங்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ நளினி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து சக்திவேலை கைது செய்து சிறையிலடைத்தார். மேலும் அவரது மாமனார் முருகனிடம் விசாரித்து வருகிறார்.

Tags : parent ,
× RELATED விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல்...