திருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை

திருவெறும்பூர் மார்ச் 19: திருவெறும்பூர் அருகே திருநெடுங்களத்தில் இருந்து தேவராயநேரிக்கு பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் போடப்படும் 3 கி.மீ. சாலை தரமில்லாமல் போடப்படுவதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள திருெநடுங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சோழங்கப்பட்டி செல்லும் சாலையில் இருந்து தேவராய நேரி நரிக்குறவர் காலனி பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் பெறும் சிரமம் அடைந்து வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் பிரதம மந்திரியின் கிராமப்புற இணைப்பு சாலை திட்டத்தின் கீழ் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு 12 அடி அகலத்திற்கு ரூ.25 லட்சம் செலவில் சாலை போடுவதற்காக வேலை தொடங்கி சாலை கொத்திப் போடப்பட்டு பல மாதமாகமாக அப்படியே கிடந்தது. இந்நிலையில் தற்போது சாலை போடும் பணி நடைபெறுகிறது. சிமெண்ட் கலந்து ஜல்லி போடுவதற்கு பதிலாக எம்சென்ட் கலந்து ஜல்லியை போட்டு வருகின்றனர். அதுவும் தரமாக போடவில்லை. மேலும் சாலையின் இரு ஓரங்களிலும் மண் அணைத்துள்ளது. சாலை ஓரம் உள்ள காட்டாறு வரியை பறித்தும் சாலை ஓரங்களில் உள்ள மண்ணையே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளமாக தோண்டி ஓரங்களில் மண் போட்டுள்ளனர்.

அப்படி மண் தோண்டப்பட்ட இடத்தில் உள்ள மின் கம்பங்கள் மழையுடன் கூடிய காற்று அடித்தால் சாய்ந்து விடும். அதனால் அந்த சாலையில் செல்பவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் அப்படி கரை ஓரம் போடப்பட்டுள்ள மண்ணும் மணலாக உள்ளது. ஒரு மழை பெய்தால் அந்த மண் கரைந்து போய்விடும் அப்படி கரைந்து போனால் புதிதாக போடப்படும் சாலையும் பழுதடையும். இது இதுகுறித்து அப்பகுதி மக்கள் சாலையை போடுவதற்கு டெண்டர் எடுத்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என்று கூறுகின்றனர்.

மேலும் இப்படி தரமில்லாமல் போடப்படும் சாலை போட்ட ஒரு மாதம், 2 மாதத்திற்கு ஒருமுறை அல்லது 2 மழைகளில் காணாமல் போய்விடும். இதனால் பல ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லாமல் அவதியுற்ற நிலையில் தற்போது போடப்படும் இந்த சாலை பயனில்லாமல் போகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை போடுவதை முறையாக ஆய்வு செய்து சாலையை சரியாக போடுவதுடன் சாலையோரம் உள்ள மண் மழையால் கரையாமல் இருப்பதற்கு வெளியிலிருந்து கிராவல் மண் கொண்டு வந்து கொட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: