×

கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு

காரியாபட்டி, மார்ச் 20: காரியாபட்டி அருகே கொரோனா நோய் குறித்து தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுத்தப்பட்டது. காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.வேப்பங்குளம் ஊராட்சி, தொட்டியங்குளம் கிராமத்தில் ஊராட்சி தலைவர் ஆதீஸ்வரன் தலைமையில் தண்டோரா முறையை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஊராட்சி பகுதிகளிலும் தூய்மை பணியை மேற்கொண்டு கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. பின்பு குடிதண்ணீர் பிடிக்கும் குழாயில் கைகளை கழுவி பிடிக்க சோப்புக்கள் வைக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் ஆதீஸ்வரன், கிராம மக்களிடம் கொரோனா வைரஸ் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். இதில் கிராம பொதுமக்கள், ஊராட்சி செயலர் ஆடியராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Tandora ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி...