×

வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம்முன் கழிவுநீர் தேக்கம் சுகாதாரக் கேடு அபாயம்

வத்திராயிருப்பு மார்ச் 20: வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் முன்பு கழிவுநீர் தேங்கி கிடப்பதால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் முன்புறம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக இருந்து வருகிறது. மாதக்கணக்காக கழிவுநீர் கிடைக்கின்றது. அதோடு செடிகள் மற்றும் புற்கள் முளைத்து போய் உள்ளன. இந்த பகுதியில் இசேவை மையம் உள்ளது. இந்த கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதோடு இசேவை மையத்திற்குள் பாம்புகள் படையெடுக்கின்றன. எனவே கழிவுநீரை அகற்ற வேண்டும். புதர்களை தூர்வார வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘வேலை நாட்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் மற்றும் இசேவை மையத்திற்கும் வந்து செல்கிறார்கள். தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் வேளையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அதோடு நிலஅளவைக்கு செல்லும் வழியில் உள்ள கட்டிடத்தை சுற்றி முட்செடிகள் முளைத்துள்ளது.

தாலுகா அலுவலகம் பின்புறம் குப்பைகளாக இருக்கிறது. தாலுகா அலுவலக வளாக பகுதியை சுத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் தேங்கவிடாமல் சுகாதார முறையில் தொட்டி போன்று கட்ட வேண்டும். அதில் தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இசேவை மைய பகுதியில் உள்ள செடிகளையும் அகற்ற வேண்டும். ஏனென்றால் தற்போது காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருவதால் சுகாதாரமான முறையில் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : office ,Vatarayaruppi Taluk ,
× RELATED அதிகாரிகளின் அலட்சியப்போக்கால்...