×

அருப்புக்கோட்டை நர்ஸ் வீட்டில் 50 பவுன் கொள்ளை

அருப்புக்கோட்டை, மார்ச் 20: அருப்புக்கோட்டையில் நர்ஸ் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை-மதுரை ரோடு ராஜீவ்நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி ராமலட்சுமி(50). அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி, அருகில் சாவியை ஒளித்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், சாவியை எடுத்து கதவை திறந்து, பீரோவில் இருந்த 50 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.

மாலையில் வீட்டிற்கு வந்த ராமலட்சுமி, நகை கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்பி பெருமாள், டிஎஸ்பி வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வைத்து சோதனை நடத்தப்பட்டது. சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்.

Tags : robbery ,nurse ,house ,Aruppukkottai ,
× RELATED வீட்டை உடைத்து 8 சவரன் கொள்ளை