×

மது, புகையிலை விற்றவர்கள் கைது

சாத்தூர், மார்ச் 20: சட்டவிரோதமாக மது, புகையிலை விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். சாத்தூர் அருகே ஊமத்தன்பட்டி கிராமத்தின் பஸ் ஸ்டாப் பின்புறம் வைத்து மதுவிற்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடுத்திற்கு சென்ற சாத்தூர் தாலுகா போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த சிங்கராஜ்(39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பஜார் பெட்டிகடையில் வைத்து புகையிலை விற்பனை செய்த அதே கிராமத்தை சேர்ந்த முத்துமாரியப்பன்(48) என்பவரை ஏழாயிரம் பண்ணை காவல்நிலைய எஸ்.ஐ. பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பெட்டிகடையில் இருந்து 13 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags : dealers ,
× RELATED புகையிலை விற்றவர் கைது