×

இருக்கன்குடி கோவிலில் சாமி தரிசனத்திற்கு தடை

சாத்தூர், மார்ச் 20: கொரோனா வைரஸ் எதிரொலியாக இருக்கன்குடி கோயிலில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு பேரிடர் என்று அறிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்களின் நலன் கருதி சாத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சாமிதரிசனம் செய்ய தற்காலிகமாக 31ம் தேதி வரை அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. மாரியம்மன் கோயிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு சாமிக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : darshan ,Sami ,Izhankudi temple ,
× RELATED புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம்...