×

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

சின்னமனூர், மார்ச் 20: இரண்டாம் நிலை நகராட்சியான சின்னமனூரில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு கமிஷனராக பணியாற்றிய கமலா பதவி உயர்வு பெற்று, கம்பம் சென்றார். இதனால், நகராட்சி கமிஷனர் பணியிடம் காலியானது. சுகாதார ஆய்வாளர் பொறுப்பில் பணிகள் நடந்தன. இதனால், பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இது குறித்து நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, காரைக்குடி நகராட்சி மேலாளராக பணியாற்றிய சியாமளா, சில தினங்களுக்கு முன், சின்னமனூர் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.  இவருக்கு பொறியாளர், மேலாலர், ஓவர்சியர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : commissioner ,
× RELATED பதிவுத்துறை தலைவர் சங்கர் பொறுப்பேற்பு