×

வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

கூடலூர், மார்ச் 20: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, கூடலூரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கூடலூர் முகையதீன் ஆண்டகை பள்ளிவாசல் ஜமாத் சார்பாக தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் எல்லைத்தெரு, பள்ளிவாசல் தெரு, உசேன் ராவுத்தர் தெரு, மணியம் காமாட்சி ஆசாரி தெரு, கிழக்கு மெயின்பஜார் வீதி, காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Tags : Black Flag ,
× RELATED குடகனாற்றில் தண்ணீர் திறக்க கோரி...