×

கொரோனா அச்சத்துடன் வரும் பொதுமக்களுக்கு மாத்திரை மட்டுமே வழங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்

தேவாரம், மார்ச் 20: சளி, இருமல், காச்சலால் கொரோனா அச்சத்துடன் வரும் நோயாளிகளுக்கு, ஊசி போடாமல் மாத்திரை மட்டுமே வழங்குவதாக புகார் தெரிவிக்கின்றனர். தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இதன் அருகே உள்ள தேவாரம், கோம்பை, டி.சிந்தலைச்சேரி, க.புதுப்பட்டி ஆகிய ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. கொரோனா பாதிப்பை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்படுகிறது.

இந்நிலையில் காய்ச்சல், இருமல், சளி தொல்லையால் கொரோனா அச்சத்துடன் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பொதுமக்கள் வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவர்கள் வழக்கம் போல மாத்திரைகளை மட்டுமே தருவதாகவும், ஊசி போடுவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இதனால், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதேநிலை தொடர்கிறது. இதனால் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் அவலம் உள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சலுக்கு ஊசிபோடுவதற்கு சம்மந்தப்பட்ட சுகாதாரத்துறை உயரதிகாரிகள் பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Corona ,public ,health center ,
× RELATED விபத்தில் சிக்குவோரை காப்பாற்ற...