×

ராயப்பன்பட்டியில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்

உத்தமபாளையம், மார்ச் 20: உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி ஊராட்சியில், குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராயப்பன்பட்டி ஊராட்சியில் பல ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற 3 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. தினசரி டன் கணக்கில் குப்பைகள் சேகரமாகின்றன.

இவைகளை சேகரிக்கும் வகையில், ஊராட்சியில் 3 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு, துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பால்ராஜ் பேட்டரி வாகன சாவிகளை துப்புரவு பணியாளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சுந்தரபாண்டியன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rayappanpatti ,
× RELATED கிளீன் குன்னூர் திட்டத்தில் 8,70,603 கிலோ...