×

கடைகள், சுற்றுலாத் தலங்கள் மூடல் கொரோனா அச்சத்தால் மூணாறு ‘வெறிச்’

மூணாறு, மார்ச் 20: கொரோனா அச்சத்தால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் கடைகள், சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மட்டும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தென்னகத்து காஸ்மீர் என அழைக்கப்படும் மூணாறு, நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கருத்தப்படுகிறது.

கடந்தாண்டு பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கையை தொலைத்த மூணாறு பொதுமக்கள், தற்போது கொரோனா அச்சத்தால் மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறு வந்த இங்கிலாந்து சுற்றுலாப் பயணிக்கு கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டதால் நகரில் உள்ள
அனைத்து சுற்றுலா விடுதிகள், உணவகங்கள், ஹோம் மேட் சாக்கலேட் கடைகள் ,தேயிலை மற்றும் வாசனை திரவியங்கள், ஏலக்காய், மிளகு மற்றும் மசாலா கடைகள் மூடப்பட்டன. இதனால், பல குடும்பங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறில் எஸ்டேட் பகுதிகளில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மூணாறு, பள்ளிவாசல், ,ஆனைச்சால், போதமேடு ஆகிய பகுதிகளில் சுற்றுலா விடுதிகளில் வரவேற்பாளர்களாகவும், விடுதி பராமரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இவைகள் மூடப்பட்டதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென வேலையிழப்பு ஏற்பட்டதால் பல குடும்பங்கள் பட்டினியால் தவிப்பதாக கூறப்படுகிறது.கோடை விடுமுறைக்கு மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாங்குவார்கள் என நகரில் உள்ள பல வியாபாரிகள் ஆடைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து, கடைகளில் வைத்திருந்தனர். தற்போது கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஇந்நிலையில், மூணாறுக்கு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வருவதற்கு பல மாதங்களாகும் என தெரிவித்துள்ளனர். மே மாதம் முதல் நகரில் மழை காலம் துவங்க இருப்பதால் கேரளா சுற்றுலாத்துறை பெரிதளவில் பாதிக்கப்படும் என்று சுற்றுலா துறை மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இடுக்கி மாவட்டத்தி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Closure ,shops ,
× RELATED நாராயணசாமி பேட்டி: வேளாண் சட்டங்களால் ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம்