×

இளையான்குடியில் கொராேனா தடுப்பு நடவடிக்கை மும்முரம்

இளையான்குடி, மார்ச் 20: இளையான்குடி பேரூராட்சி சார்பில் கொராேனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கம், இளையான்குடி பஸ் ஸ்டாண்டில் நேற்று நடைபெற்றது. விழிப்புணர்வு செயல்விளக்கத்திற்கு பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் சூர்யகுமார் வைரஸ் தடுக்கும் முறைகளை, பொதுமக்களுக்கு செயல்விளக்கமளித்தார். வெளியூரில் இருந்து வரும் அனைத்து பஸ்களிலும் தடுப்பு மருந்து தெளித்தனர்.


சாலைக்கிராமம் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் தங்கம் தலைமையிலும், துணைத் தலைவர் ஜாகிர்உசேன், சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் முன்னிலையிலும் பஸ் ஸ்டாண்ட், சிவன் கோயில், பள்ளிவாசல், ஆரம்ப சுகாதார நிலையம், மாதா கோயில் சர்ச் உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மருந்து தெளித்தனர்.

Tags :
× RELATED டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்