×

சிங்கம்புணரியில் ஒன்றியக்குழு கூட்டம்

சிங்கம்புணரி, மார்ச் 20: சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், துணைத் தலைவர் சரண்யா முன்னிலை வகித்தனர். இதில் மக்களை அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தடுப்பு வழிமுறைகள் மற்றும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவும் விதம் குறித்து விரிவாக கூறப்பட்டது. இதில் இரும்மல், தும்மல், சளி தொந்தரவு உள்ளவர்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என வட்டார மருத்துவர் நபிஷா பானு பேசினார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சத்தியமூர்த்தி, உதயசூரியன், இளங்குமார், சசிகுமார் கலைச்செல்வி, ரம்யா, உமா, பெரிய கருப்பி மற்றும் பிற துறை அலுவலர்கள், ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Union ,committee meeting ,Singapore ,
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்