×

திருப்புத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலி

திருப்பத்தூர், மார்ச் 20: திருப்புத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அஞ்சலி (52). இவர் ஆத்தங்கரைப்பட்டி ஊருக்குள் செல்லும் வழியில் வசித்து வருகிறார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் 15 ஆடுகளை வைத்து மேய்த்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் சில வீடு திரும்பவில்லை. இதனால் இரவு சுமார் 8 மணியளவில் ஆடுகளை தேடி அருகில் சென்று பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது திடீரென சாலையை கடந்த பாம்பு அஞ்சலியை கடித்துள்ளது. தகவல் அறிந்து வந்த அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அஞ்சலியை திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அஞ்சலியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruputhur ,
× RELATED தூக்குப்போட்டு பெண் தற்கொலை