×

கோயில் வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்

கீழக்கரை, மார்ச் 20: முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக சிறப்பு முகாம் களிமண்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட குத்துக்கல் வலசையில் 7 நாட்கள் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி செயலாளர் மரிய சூசை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். விடுதியின் இயக்குநர் ஜெரால்டு ஜோசப், குத்துக்கல் வலசை நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வான்ரதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கல்லூரி முதல்வர் ஹேமலதா வரவேற்றார்.

இந்த முகாமில் நாட்டு நலப்பணிதிட்ட மாணவ, மாணவிகள் குத்துக்கல் வலசையிலுள்ள ஊரணி, பள்ளி வளாகம், சாலைகள், தெருக்கள், கோயில், சமுதாய கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை தூய்மை செய்து சாலையின் ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையின் மூலம் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கோவை ஈசா யோகா மையத்தின் முலம் யோக மனவலக்கலை பயிற்சியும், எய்ட்ஸ் மற்றும் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஹேமலதா தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முகாமில் ஓர் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிகள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி...