×

நாளை மின்தடை

காளையார்கோவில், மார்ச் 20: காளையார்கோயில் துணை மின் நிலையத்திற்கு தற்போது சிவகங்கையிலிருந்து மட்டும் 110 கேவிஏ மின்பாதை இருந்து வரும் நிலையில், மாற்றுப்பாதையாக மறவமங்களத்தில் இருந்து புதிய 110கேவிஏ மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன் இறுதி கட்டப்பணிக்காக நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை காளையார்கோயில் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெரும் பகுதியிலான காளையார்கோயில், ஆண்டிச் ஊரணி, புலியடிதம்மம், சருகணி, கொல்லாவயல், கொல்லங்குடி மற்றும் நாட்டரசங்கோட்டை பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பூவந்தி கண்மாய்க்குள் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு