×

கமுதி பகுதியில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டி

கமுதி, மார்ச் 20:  கமுதியில் பல இடங்களில் குடிநீர் தொட்டி சேதமடைந்து செயல்படாமல் உள்ளதால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. கமுதி பக்கீர் அம்பலம் தெருவில் உள்ள குடிநீர் தொட்டிக்கு நீரேற்றும் மின் மோட்டார் பழுந்தடைந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி மக்கள், குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதேபோல் ஊர்காவலன் கோவில் தெரு மற்றும் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள இரண்டு மினரல் வாட்டர் பிளாண்ட் தலா ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த பிளாண்ட் சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டிற்கு இருந்து வந்தது. தற்போது வருடக்கணக்கில் செயல்படாமல் பழுதடைந்து  காணப்படுகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : area ,Kamuthi ,
× RELATED திருவேற்காடு அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பரிதாப சாவு