×

குளத்தில் மூழ்கி மாணவன் பலி

காரைக்குடி, மார்ச் 20:    காரைக்குடி அருகே பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக பலியானார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் பாலையூரை சேர்ந்த முருகேசன் மகன் மணி (13). 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா பீதியின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விட்டதால் நண்பர்களோடு அருகில் இருந்த ஐயனார் செங்கை குளத்தில் குளிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பாததால் தாய் மீனாள் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.

இந்நிலையில் மணியின் உடல் குளத்தில் மிதப்பதாக தகவல் வந்தது. சாக்கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Student ,pool ,
× RELATED குளத்தில் மூழ்கி மாணவர் பலி