×

ஓட்டல்களில் மூலிகை ரசம்

மதுரை, மார்ச் 20: கொரோனா வைரஸ் நோயைத் தடுக்கும் பொருட்டு, இன்று முதல் ஓட்டல்களில் மூலிகை ரசம் வழங்கப்பட உள்ளதாக மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தலைவர் டெம்பிள் சிட்டி குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் நோய் தாக்கம், தற்போது இந்தியா மட்டுமின்றி, அனைத்து நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நோயால் பலியாவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு, 20ம் தேதி (இன்று) முதல் மதுரை மாவட்ட ஓட்டல்களில், மதிய சாப்பாட்டிற்கு, `ஆடாதொட மூலிகை ரசம்’ கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர் கை கழுவுமிடத்தில் சோப் ஆயில் வைப்பதோடு, கடைகளை சுற்றி கிருமி நாசினி தெளிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்கள் தங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதுடன், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவவும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Hotels ,
× RELATED புதுச்சேரியில் கடைகள், ஓட்டல்கள்,...