கொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

மதுரை, மார்ச் 20: மதுரை அருகே சின்னஉடைப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று கலெக்டர் வினயிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்ய சின்ன உடைப்பு அருகே முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கணக்கானோர் தங்குவதால், இந்த கொரோனா வைரஸ் அந்த பகுதியில் பரவி கிராம மக்களை கடுமையாக தாக்கும். எனவே, இந்த முகாமை பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்ைக விடுத்தனர்.

Advertising
Advertising

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அங்கு தங்க வைக்கப்படமாட்டார்கள். வைரஸ் நோய் தாக்காதவர்கள் உண்மையில் அவர்களுக்கு வைரஸ் ஏதுவும் உள்ளதா என்பதை கண்டறியத்தான் முகாம் என்றார்.

Related Stories: