×

ஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது

மதுரை, மார்ச் 20: கொரோனாவால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் மதுரை கோட்ட ேபாக்குவரத்து கழகத்தில் தினசரி ரூ.40 லட்சம் வருவாய் குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை கோட்டத்தில் மதுரை மண்டலம், விருதுநகர் மண்டலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 3 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் உள்ளூர் பஸ்களும், வெளியூர் பஸ்களும் என சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மூலம் நாளொன்று குறைந்தது ரூ.2.80 கோடி வசூலானது. திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் இந்த வருவாய் சற்றே அதிகரிக்கும். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதால், பொதுமக்களின் பயணம் வெகுவாக குறைந்துள்ளது. பல இடங்களுக்கு குறைவான பயணிகள் மூலமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், கடந்த சில நாட்களாக ரூ.2.40 கோடி அளவுக்கே வருவாய் கிடைக்கிறது.

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அன்றாட வருவாய் மேலும், மேலும் குறைய வாய்ப்புள்ளது.இதே நிலை தான் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும். மதுரை-சென்னை இடையிலும், இதர நகரங்களும் தினசரி சுமார் 120 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் சுமார் ரூ.4 கோடி வரையில் தினசரி வருவாய் கிடைத்தது. தற்ேபாது கொரோனா பாதிப்பால் பயணிகள் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. இதனால், கிட்டத்தட்ட பாதியளவு பஸ்களே இயக்கப்படுகிறது. இதனால், வருவாயும் பாதியாக குறைந்துள்ளது. இதேபோல் மதுரை-சென்னை இடையே 300க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ் சர்வீஸ் இயக்கம் இருக்கும். தற்போது பாதிக்கும் குறைவான ஆம்னி பஸ்களே இயக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்களின் இயக்கம் பாதியாக குறைந்துள்ளதால் பஸ்நிலையத்தில் குறைவான கூட்டமே உள்ளது.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...