×

பூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு

மதுரை, மார்ச் 20: மதுரை பூட்டிய கதவை உடைத்து நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை காமராஜர் சாலை 1வது தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (47). இவர் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றவர் மீண்டும் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை, 30 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தெப்பகுளம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பெண்ணிடம் ஆறரை பவுன் நகை பறிப்பு