×

தீ காயம்பட்ட இளம்பெண் பலி

பட்டிவீரன்பட்டி, மார்ச் 20: பட்டிவீரன்பட்டி அருகே தீ காயம்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவைச் சேர்ந்த சரோஜா மகள் இளவரசி (21). இவர் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வீட்டில் விளக்கு ஏற்றும்போது இவருடைய சுடிதாரில் எதிர்பாரத விதமாக தீ பிடித்தது. இவரது அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்து பார்த்துள்ளனர். அங்கு தீக்காயங்களுடன் கிடந்த இளவரசியை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன்பின்வு அங்கிருந்து மேல் சிகிச்சைகாக தேனியில் உள்ள க.விலக்கு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்த்தனர். அங்கு இளவரசி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது சம்பந்தமாக இளவரசியின் மாமா சவுந்திரராஜன் கொடுத்த புகாரின்பேரில் பட்டிவீரன்பட்டி எஸ்.ஐ. தினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : teenager ,
× RELATED சரக்கு வாகனத்தில் தீ