கொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை

பழநி, மார்ச் 20: கொரோன நோய்த்தொற்று ஏற்பட்டு வரும் சூழலில் பழநி பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில எல்லைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு அருகில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு போக்குவரத்து பெருமளவில் நிறுத்தப்பட்டு விட்டன. பழநி பகுதியில் தற்போது சாலை சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் அதிகளவு நடந்து வருகின்றன. இப்பணிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Advertising
Advertising

ஊதியம் குறைவு, அதிக நேரம் வேலை செய்தல், கடின உழைப்பு போன்ற காரணங்களால் ஒப்பந்ததாரர்களும் வடமாநிலத்தவரை பணியில் ஈடுபடுத்துவதில் அதிகள ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோன பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிற பகுதிகளிகளில் இருந்து கட்டுமான பணிகளுக்காக வடமாநிலத்தவர்கள் பழநி பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர். பல பகுதிகளில் வேலை செய்வதால் இவர்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகளவு உள்ளது. எனவே, பணியில் ஈடுபட்டுள்ள வடமாநிலத்தவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும். புதிதாக வடமாநிலத்தவர்களை அழைத்து வரக்கூடாதென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டறிய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: