×

கொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி

கொடைக்கானல், மார்ச் 20: கொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கான வட்டார அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.
கொடைக்கானலில் மலைவாழ் ஆதிவாசி பழங்குடியின இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. செண்பகனூர் பீக் அமைப்பின் சார்பில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. கொடைக்கானல் மலைப் பகுதியை சேர்ந்த வடகவுஞ்சி, மன்னவனூர், கிளாவரை, பாலமலை, மூலையாறு, கோரம் கொம்பு, கடுகு தடி, ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களைச் சேர்ந்த 60 இளைஞர்கள் இந்த போட்டிகளில் பங்கு பெற்றனர். 14 அணிகள் இந்த கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டன.

இரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டிகளில் பால மலையைச் சேர்ந்த அணி முதல் இடத்தையும், மன்னவனூர் அணி இரண்டாவது இடத்தையும், மூலையாறு அணி மூன்றாவது இடத்தையும் பெற்றன. இரண்டாம் நாள் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பீக் அமைப்பின் இயக்குனர் ஆரோக்கியசாமி தலைமை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். கொடைக்கானல் செண்பகனூர் திரு இருதயக் கல்லூரி இயக்குனர் பேட்ரிக் முன்னிலை வகித்தார். போட்டியின் நடுவர்களாக ஜோ ரீகன்,இருந்தார் .லாசர் நன்றி கூறினார்.

Tags : Regional Volleyball Tournament ,Kodaikanal ,Adivasi Aboriginal Youth ,
× RELATED கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு