மேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்

மேட்டூர், மார்ச் 20:  மேட்டூர் நகரில் திமுக சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேட்டூர் சதுரங்காடி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி பிரசாரம் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி கலந்து கொண்டு சதுரங்காடி, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கி தினந்தோறும் கைகளை 10 தடவை கழுவ வேண்டும், தும்மும் போது கைகுட்டையை உபயோகிக்க வேண்டும். தொடர்ந்து இருமல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும், கூறினார்.

Advertising
Advertising

மேலும் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் இது வரை 1 லட்சம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி உள்ளனர் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட அவை தலைவர் கோபால், மாவட்ட துணை செயலாளர் பாலு, மேட்டூர் நகர செயலாளர் காசிவிஸ்வநாதன், அவை தலைவர் ராஜா, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மேச்சேரி ஒன்றிய செயலாளர் சீனிவாசபெருமாள், வீரக்கல் புதூர் பேரூர் துணை செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: