கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது

சேலம், மார்ச் 20: சேலம் மாநகரில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பீதியால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,  மாநகராட்சிக்கு உட்பட்ட 19 பூங்காக்கள், அம்மா சுற்றுச்சூழல் அரங்கு, திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், கிளப்புகள் மற்றும் கேளிக்கை விடுதிகள், 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிறுவனங்கள், பெரிய ஜவுளி கடைகள் ஆகியவை வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் 50 சதவீதம் அளவிற்கு குறைந்து விட்டது.  மாநகரில் உள்ள லாட்ஜ், ஓட்டல்களில் தங்குவோர் எண்ணிக்கையும் 60 முதல் 65 சதவீதம் வரை குறைந்து விட்டது. திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கூடுவது குறைந்து வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை மேலும் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் ஆலோசித்து வருகிறது.

இதையடுத்து மாநகரில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதா என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றும் ஜவுளி கடை, பெரிய மளிகை கடைகளை மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து கணிகாணிப்பு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். 

Related Stories:

>