×

ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம்,மார்ச்20: ராசிபுரம் பாவை தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பேரணி, புதுச்சத்திரம் அடுத்த  செல்லப்பம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செல்லப்பம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சதீஷ் வரவேற்றார். புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து செல்லப்பம்பட்டி பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது.பின்னர், கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம், தொடக்கப் பள்ளி வளாகங்களை மாணவர்கள் சுத்தம் செய்தனர். பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்து குறித்து எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் செல்லப்பம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டடனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன்,  இயக்குநர்கள் செந்தில், ராமசாமி மற்றும் முதல்வர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Corona ,awareness rally ,Rasipuram Paavai College ,
× RELATED தீயணைப்பு துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி